செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது.

செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

*முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.

* ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

* குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

* உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

Why cell phones are unsafe?

Cell phones emit signals via radio waves, which are comprised of radio frequency (RF) energy, a form of electromagnetic radiation

The controversy lies over whether or not cell phones emit enough radiation to cause adverse health effects. The concern is that cell phones are often placed close to or against the head during use, which puts the radiation in direct contact with the tissue in the head or they wear it on their hip causing potential danger to the kidneys and liver.The added concern with non-ionizing radiation, the type of radiation associated with cell phones, is that it could have long-term effects. Although it may not immediately cause damage to tissue, scientists are still unsure about whether prolonged exposure could create problems. This is an especially sensitive issue today, because more people are using cell phones than ever before.

* காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

* தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

* நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

* செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

* செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

* செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
* செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

* போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும்.

* கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.